நிகழ்ச்சி வடிவம்:

வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குபெறப் பதிவுசெய்தவர்களைக் கொண்டு இரண்டு அணிகள் அமைக்கப் படும். ஒவ்வொரு அணியிலும் 20 முதல் 30 பேர் சேர்த்தக் கொள்ளப்படுவார்கள்

பயிற்சியளிப்பு:

 • ஒவ்வோர் அணிக்கும் தனித்தனியாகச் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பயிற்சியாளர்க‌ள் பயிற்சியளிப்பார்க‌ள்.
 • அணித்தலைவர்கள் தங்கள் அணி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பாடங்களைப் பிரித்துக்கொடுத்து மேற்பார்வை செய்துவருவார்கள்.
 • பயிற்சிக்கான சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்படும். பாடப்பகுதிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
 • ஒவ்வொரு வாரமும் தொலைபேசி உரையாடல் மூலம் பயிற்சி (இணையவழி) அளிக்கப்படும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நடத்தும் விதிமுறைகள்:

 • நிகழ்ச்சியின் முதல்திரையில் வினா வரும். குறிப்பிட்ட நேரம்
 • முடிந்தவுடன் விடை அடுத்த (இரண்டாம்) திரையில் வரும்.
 • குறிப்பிட்ட அணியின் விடை தவறாக இருந்தாலோ நேரம் முடிந்து விட்டாலோ, அந்த வினா அடுத்த அணிக்குக் கேட்கப்படமாட்டாது.
  விடையளிக்க ஒரே ஒரு வாய்ப்புதான் உண்டு.
 • நடுவர்கள் சரி/தவறு பார்த்து, மதிப்பெண்களைக் கணக்கிடுவார்கள்.
 • நிகழ்ச்சியின்போது கைப்பேசி, மடிக்கணினி, நூல்கள், ஆவணங்கள் முதலியன‌ பயன்படுத்த அனுமதியில்லை.
 • அணிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தில் உடைகளை அணிந்து மேடையில் இரண்டு குழுக்களாக‌ அமர்ந்திருப்பார்கள்.
 • இரண்டு நடத்துநர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை மேடையில் நடத்துவார்கள்.
 • ஒருமணி நேர நிகழ்ச்சியில், ஒவ்வோர் அணிக்கும் 25 வினாக்கள். நிகழ்ச்சியின் முடிவில் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டு.
  எந்த அணி அதிக மதிப்பெண்கள் பெற்றது என்பதும் அறிவிக்கப்படும்.

தமிழ் இலக்கியங்களைப் படிப்பதோடு, புதிய‌ நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதற்கும் இந்நிகழ்ச்சி வழிவகுக்கின்றது. மிகுதியான மக்கள் விருப்பத்தோடு பங்கேற்கும் நிகழ்ச்சி என்பது இதன் தனிச் சிறப்பு.

1. 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும்.
2. இது ஒரு உரையாடல் நிகழ்ச்சி. அனைத்து கேள்விகளும் திருக்குறள் சார்ந்து அமையும். உங்கள் கருத்துக்களும் திருக்குறள் சார்ந்தே அமைய வேண்டும்
3.மதம், பாலினம், இனம், அரசியல் சார்ந்த கருத்துக்களை பேச அனுமதியில்லை
4.நெறியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எளிய நடையில், பேச்சுத் தமிழில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
5. யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கியோ/ விமர்சித்தோ பேசக்கூடாது
6. நெறியாளரின் தீர்ப்பே இறுதியானது.நெறியாளருடன் விவாதம் செய்யக்கூடாது
7.நெறியாளர்களின் வழிகாட்டுதலின் படியே பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும்
8. இது ஒரு விவாத நிகழ்ச்சி எனவே மேடைப்பேச்சு போன்று நீண்ட நெறிய உரைகளை தவிர்க்க வேண்டும்
9. நெறியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியான உங்கள் கருத்துக்களை மட்டுமே வழங்க வேண்டும்
10. இந்நிகழ்ச்சியின் நோக்கம் திருக்குறளைப் பற்றிய கருத்துக்களை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வது