போட்டி வடிவம்:

 • அதிக திருகுறள்களை சரியாக ஒப்புவிக்கும் பங்கேற்பாளர்களுக்கு உலகத் திருக்குறள் மாநாட்டின் குறள் தூதர் பட்டம் அளிக்கப்படும்.
 • குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம்.

நிலைகள் மற்றும் வயது வரம்பு:

 • குழந்தைத் தூதர் – 5 வயது வரை
 • இளந்தூதர் – 5 வயதுக்கு மேல்

பரிசு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அமெரிக்க மண்ணில், வள்ளுவரின் உலகப் பொது நூல் திருக்குறளின் புகழ் ஒங்க உலகத் திருக்குறள் மாநாட்டு மேடையில் உங்கள் குழந்தைகளின் திருக்குறள் திறன் ஒளிர குழந்தைத் தேனீக்களுக்குள் ஒரு “குறள் தேனீ” தேடல்.

நிலை, வயது வரம்பு மற்றும் குறள்களின் எண்ணிக்கை:

 • அரும்புகள்:8 வயது வரை – 40 குறள்கள்*
 • மலர்கள்:9-12 வயது வரை – 80 குறள்கள்*
 • கனிகள்:13-17 வயது வரை – 100 குறள்கள்*

*குறள்கள், குறளின் பொருள், குறளில் உள்ள சொற்கள், குறள் சொற்களின் பல பொருள்கள், திருக்குறள் பற்றிய பொது அறிவுக்கேள்விகள், கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் பதிவு செய்த போட்டியாளர்களுக்கு பதிவுத் தேதி முடிந்தவுடன் வழங்கப்படும்.

அணி விவரம்:

 • குறள் தேனீ போட்டி தனிப் போட்டியாளர்களுக்கான போட்டி.
 • அணியாக போட்டியிடத் தேவையில்லை.
 • பலர் சம மதிப்பெண்கள் பெற்றால், அதைத் தவிர்க்க “சவால் சுற்று” கேள்விகள் கேட்கப்படும்.

கேள்வி வடிவம்:

 • குறளின் முதல் சொல்லை வைத்து குறள் கூறுதல்
 • கொடுக்கப்படும் பொருளுக்கான குறளும், ஆங்கிலப்பொருளும் கூறுதல்
 • குறளின் அதிகாரம் என்ன எனக் கூறுதல்
 • குறளில் உள்ள ஏதாவது ஒரு சொல்லை வைத்து குறள் கூறுதல்
 • குறளுக்குப் பொருள் கூறுதல்
 • குறளில் உள்ள ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் கூறுதல்
 • திருக்குறள் பற்றிய பொது அறிவுக்கேள்வி-பதில்கள்

போட்டி வடிவம்:

 • ஒவ்வொரு சுற்றிலும் மூன்று கேள்விகள் கேட்கப்படும்
 • அனைத்துப் போட்டிகளும் மெய்நிகர் (zoom) வழியாக நடத்தப்படும்
 • இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு உலகத் திருக்குறள் மாநாட்டு மேடையில் நடத்தப்படும்

பரிசு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 • பங்கேற்பாளர் கீழ்காணும் திருக்குறள் அதிகாரங்களில் ஒன்றினை முழுவதாக அறிந்தவராக இருக்க வேண்டும்
 • திருக்குறள் அதிகாரத்தின் குறட்பாக்களையும் அதன் பொருளையும் அறிந்தவராக இருக்க வேண்டும்.அதிகாரத்தின் பொருள் சிதையாத வகையில் கற்பனைக் கதையாக அல்லது தனது வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பை இரண்டு நிமிடங்களுக்குள் எடுத்துரைக்க வேண்டும். பின் தனக்குப் பிடித்த திருக்குறளை சொல்ல வேண்டும்.
 • இந்தப் போட்டியில் சிறந்த மூன்று பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியாளர்களுக்கு மதிப்பீடுகள் பின்வரும் அடிப்படையில் அளிக்கப்படும் (1) பயன்படுத்தப்பட்ட நயமிகு சொற்கள் (2) சொற்களின் ஆழமும் பொருளும் (3) கதை அல்லது நிகழ்ச்சி சொல்லப்பட்ட முறை மற்றும் உணர்வுகள் வெளிப்பட்ட முறை
 1. அறன் வலியுறுத்தல் (அதிகாரம் 4)
 2. அடக்கமுடைமை (அதிகாரம் 13)
 3. வலியறிதல் (அதிகாரம் 48)
 4. செங்கோன்மை (அதிகாரம் 55)
 5. ஊக்கம் உடைமை (அதிகாரம் 60)
 6. குறிப்பறிதல் (அதிகாரம் 71)
 7. கூடாநட்பு (அதிகாரம் 83)
 8. சான்றாண்மை (அதிகாரம் 99)
 9. பண்புடைமை (அதிகாரம் 100)
 10. உழவு (அதிகாரம் 104)